சென்னை:
ன்லைன் ரம்மி தடை அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர் அலட்சியம் காட்டுவதும் நியாயம் அல்ல என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த அக்டோபரில் ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக கடந்த அக்டோபர் மாதம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருகிறார். இது தொடர்பாக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியில் கூறியிருந்தார். மேலும், ஆளுநரை சந்தித்து ஒப்புதல் வழங்க வலியுறுத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், ஏற்கனவே ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்து தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார். இதனால், மசோதாவுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆளுநர் தரப்பில் இருந்து மசோதா தொடர்பாக சில விளக்கங்கள் கேட்டு தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் கடிதம் எழுதப்பட்ட உள்ளது.

இந்நிலையில், ஆன்லைன் ரம்மியால் ஒரு உயிர் போனாலும் ஆளுநரே பொறுப்பு என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு இன்றைக்குள் ஆளுநர் ஆர்.என்.ரவி கையெழுத்திட வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு அவசர சட்டம் கொண்டு வந்ததும், ஆளுநர் அலட்சியம் காட்டுவதும் நியாயம் அல்ல என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆளுநர் தமிழ்நாடில் அரசியல் செய்யக்கூடாது; ஆன்லைன் ரம்மியால் இனி ஒரு உயிர் போனாலும் அதற்கு ஆளுநரே பொறுபேற்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.