புதுடெல்லி:
ன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நாளை விவாதிக்கக் கோரி திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.

ஆன்லைன் விளையாட்டான ரம்மிக்கு தடை விதிக்க கோரி, நாடாளுமன்றத்தில் நாளை நடைபெறவுள்ள அமர்வில் விவாதிக்க திமுக சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிமையாகி உள்ளனர்.

பொழுதுபோக்கிற்காக இந்த விளையாட்டில் ஈடுபடுபவர்கள், காலப்போக்கில் இதற்கு அடிமையாகி விடுகின்றனர். இந்த விளையாட்டால், தங்களது உழைப்பையும், பணத்தையும் இழப்பதோடு, இறுதியில் தங்களது உயிரையே மாய்த்து கொள்கின்றனர்.

இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பலர் தற்கொலை செய்துகொள்கின்றனர். இதனை தடுப்பதற்காக ஆன்லைன் ரம்மியை தடை செய்யக்கோரி பலர் தரப்பில் கூறப்பட்டு வந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் மீண்டும் கூடுதல் விளக்கம் கேட்டு மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில் நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தின் 2வது அமர்வில், இந்த ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது தொடர்பாக விவாதிக்க திமுக எம்.பி டீ.ஆர்.பாலு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது குறித்து அவர் தனது நோட்டீஸில் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.