Skip to content
  • Sun. Sep 20th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

ஆன்லைன் வகுப்புகள் வழிமுறைகள்… உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

Jul 20, 2020
சென்னை:
ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய வழிமுறைகளை மத்தியஅரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், தற்போது பல தனியார் கல்லூரிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த தொடங்கி உள்ளது.  அரசு பள்ளிகள் கல்லூரிகளிலும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த  முடிவு செய்யப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பல பொதுநல வழக்குகள்  தொடரப்பட்டது.  விசாரணையின்போது,   கண் மருத்துவமனை டீன் அறிக்கை அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் மத்தியஅரசும் பதில் அளிக்க உத்தர விட்டது.
வழக்கின் இன்றைய விசாரணையின்போது மத்தியஅரசு சார்பில் விளக்கம் அளித்துள்ளது.
அதன்படி, எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி படிக்கும் குழந்தைகளுக்கு 30 நிமிடங்கள் மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும்.
1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை தலா 45 நிமிடங்கள் என 2 ஆன்லைன் வகுப்பு மட்டுமே நடத்த வேண்டும் 
9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 45 நிமிடங்களுக்கு மிகாமல் 4 வகுப்புகள் நடத்தலாம்
மேலும், தற்போதைய சூழலுக்கு ஏற்ப புதிய வதிமுறைகளை மாநில அரசுகள் வகுத்து கொள்ளலாம் எனவும் மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவீந்திரன் தொடர்ந்து ஆன்லைன் மூலம் பாடங்களை கவனிப்பதால் மாணவர்களுக்கு ‘கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்’ என்ற நோய் ஏற்படுவதாக தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து ஜூலை 27 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Post navigation

சென்னையில் சாலையோர வியாபாரி உள்பட அனைத்து வணிகர்களுக்கும் கொரோனா சோதனை…
கொலராடோவில் பியூபோனிக் பிளேக் நோய் உறுதியாகியுள்ள ஒரு அணில்

Related Post

News

SIR: பாரத ரத்னா பேராசிரியர் சி.என்.ஆர். ராவுக்கு பெயர் முரண்பாடு தொடர்பாக நோட்டீஸ்

News இந்தியா

டெல்லியில் அதிர்ச்சி: 16 வயது மாணவிக்கு ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் பாலியல் வன்கொடுமை

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer