கொலராடோவில் உள்ள ஒரு அணிலுக்கு “பிளாக் டெத்” என்றும் அழைக்கப்படும் பியூபோனிக் பிளேக்  உறுதியாகி இருப்பதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். டென்வர் நகருக்கு மேற்கே உள்ள ஜெபர்சன் கவுண்டியில் உள்ள ஒரு நகரத்தில் இந்த அணில் கண்டுபிடிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. இது அப்பகுதியில் பதிவாகியுள்ள முதல் பிளேக் நோய்தொற்று எனவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். நோய் வாய்ப்பட்ட அல்லது இறந்த காட்டு விலங்குகள்,  அணில் போன்ற கொறித்து உண்ணிகளுடன் தொடர்பைத் தவிர்ப்பது மற்றும் செல்லப்பிராணிகளை வெளியில் சுதந்திரமாக சுற்றித் திரிவதைத் தவிர்ப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு குடிமக்களை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கொலராடோவில் ஒரு அணில் உள்ளூர் சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, “பிளாக் டெத்” என்றும் அழைக்கப்படும் புபோனிக் பிளேக் இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. டென்வர் நகருக்கு மேற்கே உள்ள ஜெபர்சன் கவுண்டியில் உள்ள ஒரு நகரத்தில் அணில் கண்டுபிடிக்கப்பட்டது, இது இப்பகுதியில் முதல் வழக்கு என்று சுகாதார அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர். சீன பிராந்தியமான இன்னர் மங்கோலியாவில் உள்ள ஒரு நகரத்தில் அதிகாரிகள் இந்நோய் பற்றிய எச்சரிக்கை ஒன்றை விடுத்த ஒரு வாரத்திற்குப் பிறகு இது கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இன்னர் மங்கோலியாவிலிருந்து வந்தவர்களில் குறைந்தது நான்கு பிளேக் நோய் கொண்டவர்கள் பதிவாகியுள்ளனர் என தி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. அவற்றில் இரண்டு பிளேக்கின் கொடிய மாறுபட்ட வடிவமான நிமோனிக் பிளேக் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

1340-களின் மத்தியில் ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவில் சுமார் 200 மில்லியன் மக்களைக் கொன்றதில் புகழ் பெற்ற பியூபோனிக் பிளேக், பாக்டீரியாவால் ஏற்படும் ஆபத்தான நோயாகும். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின்படி, பிளேக் பாக்டீரியத்தை கொண்டிருக்கும் விலங்குடன் விளையாடுதல் அல்லது பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு விலங்கைக் கையாளுவதன் மூலம் மனிதர்கள் பொதுவாக பாதிக்கப்படுகிறார்கள். அறிகுறிகளில் அதிக காய்ச்சல், சளி, தலைவலி, குமட்டல் மற்றும் தீவிர வலி மற்றும் நிணநீர் வீக்கம் ஆகியவை அடங்கும். சிடிசி வெளியிட்டிருக்கும் தகவல்களின்படி, இந்த நோய் சரியான சிகிச்சை இல்லாமல் கடுமையான பாதிப்புகளை அல்லது மரணத்தை ஏற்படுத்தும். ஆன்டிபயாடிக் மருந்துகள் அதற்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.

பிளேக் பெரும்பாலான கண்டங்களில் காணப்பட்டாலும், 1990 களில் இருந்து பெரும்பாலான பதிவுகள் ஆப்பிரிக்காவில் நிகழ்ந்துள்ளன என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. நோய்வாய்ப்பட்ட அல்லது இறந்த காட்டு விலங்குகள் மற்றும் கொறித்துண்ணிகளுடன் தொடர்பைத் தவிர்ப்பது மற்றும் செல்லப்பிராணிகளை வெளியில் சுதந்திரமாக சுற்றித் திரிவதைத் தவிர்ப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கொலராடோவில் உள்ள உள்ளூர் அதிகாரிகள் குடிமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.  பூனைகள் பிளேக் நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. மேலும் உடனடியாக ஆன்டிபயாடிக்  சிகிச்சையளிக்கப்படாவிட்டால் அவை இறக்கக்கூடும் என்று அவர்கள் கூறினர்.

ஆறு மாதங்களுக்கு முன்பு தோன்றிய மற்றொரு தீவிர நோயான கோவிட் -19 உடன் உலகம் தொடர்ந்து போராடி வரும் இந்த வேளையில், பிளேக் நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த வார செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, கொரோனா  வைரஸ் உலகளவில் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 15 மில்லியனை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இறந்தவர்களின் எண்ணிக்கை 7 இலட்சத்தை எட்டவுள்ளது. சிடிசி படி, நாட்டின் உயர்மட்ட தொற்று நோய் நிபுணர் டாக்டர் அந்தோனி ஃபயுசி இதை 1918 ஆம் ஆண்டு பரவி சுமார் 50 மில்லியன் மக்களைக் கொன்ற ஃப்ளு தொற்றுநோயுடன் ஒப்பிட்டுள்ளார்.
Thank you: CNBC
Author: Berkeley Lovelace