சென்னை:
ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய வழிமுறைகளை மத்தியஅரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், தற்போது பல தனியார் கல்லூரிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த தொடங்கி உள்ளது. அரசு பள்ளிகள் கல்லூரிகளிலும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பல பொதுநல வழக்குகள் தொடரப்பட்டது. விசாரணையின்போது, கண் மருத்துவமனை டீன் அறிக்கை அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் மத்தியஅரசும் பதில் அளிக்க உத்தர விட்டது.
வழக்கின் இன்றைய விசாரணையின்போது மத்தியஅரசு சார்பில் விளக்கம் அளித்துள்ளது.
அதன்படி, எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி படிக்கும் குழந்தைகளுக்கு 30 நிமிடங்கள் மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும்.
1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை தலா 45 நிமிடங்கள் என 2 ஆன்லைன் வகுப்பு மட்டுமே நடத்த வேண்டும்
9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 45 நிமிடங்களுக்கு மிகாமல் 4 வகுப்புகள் நடத்தலாம்
மேலும், தற்போதைய சூழலுக்கு ஏற்ப புதிய வதிமுறைகளை மாநில அரசுகள் வகுத்து கொள்ளலாம் எனவும் மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவீந்திரன் தொடர்ந்து ஆன்லைன் மூலம் பாடங்களை கவனிப்பதால் மாணவர்களுக்கு ‘கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்’ என்ற நோய் ஏற்படுவதாக தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து ஜூலை 27 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.