சென்னை,
தமிழ்நாட்டில் 21 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறு தோண்ட ஓன்ஜிசி முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு ஹைட்ரோகார்பன் திட்டம் பற்றி தமிழக மக்கள் கோபமாக இருப்பதால், பொதுமக்களின் கருத்துக்களை கேட்காமல் எண்ணை ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறது.
தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக பொதுமக்கள் போராடி வருகின்றனர். அதேபோல் பாண்டிச்சேரிகாரைக்காலிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பொதுமக்களின் கருத்துக்களை கேட்காமல் திட்டத்தை செயல்படுத்த ஓஎன்ஜிசி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக தமிழகத்தில் 4 மாவட்டங்களில் 21 இடங்களை தேர்வு செய்துள்ளதாகவும், அந்த இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான கிணறுகளை தோண்ட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் வல்லுநர்கள், ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், ஓஎன்ஜிசி இந்த செயல்முறையை ஆய்வு செய்வதற்கு நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஒப்புதல் கொடுத்துள்ளது.
சமீபத்தில் ஓஎன்ஜிசி இந்த திட்டத்தை செயல்படுத்த, பொது விசாரணையில் இருந்து விலக்கு கேட்டு நிபுணர் குழுவிடம் விவாதம் செய்து அதற்கான விரிவான அறிக்கை சமர்பித்துள்ளது. அப்போது, ஏற்கனவே திட்டமிட்டபடி தமிழ்நாட்டில் அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் எண்ணை கிணறு தோன்ற முடிவு செய்துள்ளது.
அதன்படி நாகப்பட்டினத்தில் 9 கிணறுகள், அரியலூரில் 6, தஞ்சாவூரில் 5, திருவாரூரில் 1 மொத்தம் 21 கிணறுகள் தோண்ட முடிவு செய்துள்ளது.
இந்த கிணறுகள் அரியலூர் மற்றும் இதர பகுதிகளில் எண்ணெய் சுரங்க சுரங்க ஒழுங்குமுறைகளின் படி குடியிருப்பு, நெடுஞ்சாலைகள், ரயில்வே கோடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகிய பகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களில் ONGC கிணறுகள் தோண்ட தயாராக உள்ளது. அதேபோல் மற்ற மாவட்டங்களில், ஏற்கனவே துளையிட்டு பரிசோதிக்கப்பட்டுள்ள இடங்களில் தொடங்கும் என்றும் கூறியுள்ளது.
இதுகுறித்து பல தரப்பு விவாதங்கள் நடைபெற்றதாகவும், ஆனால் மத்திய அரசின் ஒஎன்ஜிசி நிறுவனம் இதில் விடாப்பிடியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.