செக்மோசடி வழக்கில் சரத்குமாருக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு…

Must read

சென்னை: செக் மோசடி வழக்கில் சரத்குமார், ராதிகா சரத்குமாருக்கு வழங்கப்பட்ட 1ஆண்டு சிறை தண்டனையை  நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

நடிகர் சரத்குமார், ராதிகா சரத்குமாரின் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம்  படத்தயாரிப்புக்காக   தனியார் நிறுவனத்திடம் கடந்த 2014 ஆம் ஆண்டு ரூ. 1.5 கோடி  வாங்கியது. கடனை திருப்பியளிப்பதில மேஜிக் பிரேம் நிறுவனம்   கொடுத்த செக், ங்கிக்கணக்கில் பணம் இல்லாததால்  பவுன்ஸ் ஆனது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்,சரத்குமாருக்கு 7 வழக்குகளில் தலா ஓராண்டு சிறை  தண்டனை விதித்து சென்னை சிறப்பு  நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதைத்தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காக தண்டமைனயை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்ற, சென்னை சிறப்பு நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது.

More articles

Latest article