வருடத்திற்கு ஒருமுறை: ஏழுமலையானை தரிசனம் செய்ய புதிய கட்டுப்பாடு?

திருப்பதி,

ண்டுக்கு ஒருமுறை மட்டுமே திருப்பதி ஏழுமலை வெங்கடேசனை தரிசிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அந்திர மாநில அறநிலையத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசக்க தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். வார இறுதி நாட்களிலும், விசேஷ நாட்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவதால், ஏழுமலையான தரிசிக்க நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. ஒரே பக்தர்களே  மீண்டும் மீண்டும்  ஏழுமலையான தரிசிக்க வருகை தருவதால் கூட்டம் அதிகரித்து வருவதக கூறப்படுகிறது.

இதன் காரணமாக கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், திருப்பதியில் ஒருநபர் ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என அமைச்சர் மணிக்கயால் ராவ் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநில அறநிலையத்துறை அமைச்சர் மணிக்கயால் ராவ் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது,

இனி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே ஒரு தனிநபர் ஏழுமலையான  தரிசனம் செய்யமுடியும் என்றார்.  தரிசனத்திற்கு பலர் சிபாரிசு செய்வதால் ஒருவரே பலமுறை ஏழுமலையானை தரிசிக்கின்றனர். இதன் காரணமாக கூட்டம் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கவே புதிய நடைமுறை அமல்படுத்துவது குறித்து ஆலோசன செய்து வருவதாகவும் கூறினார்.

மேலும்  ஆதார் கார்டு மூலம் திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறினார்.

ஆந்திர அமைச்சரின் அறிவிப்பு பக்தர்களுக்கு பேரிடியாக உள்ளது. சாமி கும்பிடக்கூட கட்டுப்பாடுகள் விதிப்பதா என குமுறுகின்றனர்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: one time onlyTirupati Darshan a year new rules, ஏழுமலையான தரிசனம் செய்ய புதிய கட்டுப்பாடு: ஆந்திர அமைச்சர், வருடத்திற்கு ஒருமுறை: ஏழுமலையான தரிசனம் செய்ய புதிய கட்டுப்பாடு?
-=-