வாஷிங்டன்

லகிலேயே மிகவும் பழமையான ஜப்பான் பொன்சாய் மரங்களில் ஒன்று அமெரிக்காவில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது.

வானளாவி வளரும் மரங்களை பூந்தொட்டிக்குள் வளரவைப்பது பொன்சாய் என அழைக்கப்படுகிறது.   இந்தக் கலை ஜப்பானில் ஆரம்பிக்கப்பட்டது.   இந்த பொன்சாய் மரங்கள் நீண்ட நாட்கள் நிலைத்து இருக்கும் எனக் கூறப்படுகிறது.    உலகிலேயே பழமையான பொன்சாய் மரங்களில் இரண்டு ஜப்பானின் டோக்யோ வில் வைக்கப்பட்டுள்ளன.  இவைகள் சுமார் 450 மற்றும் 550 வருடங்கள் பழமையானவை எனக் கூறப்படுகிறது.

இவ்வகையில் ஜப்பானியர் ஒருவர் கடந்த 1976ஆ  வருடம் அமெரிக்காவுக்கு பழமையான பொன்சாய் மரம் ஒன்றை பரிசளித்துள்ளார்.   இந்த மரம் உலகிலேயே பழமையான மரங்களில் ஒன்றாகும்.   மசாரு யமகி என்பவரால் பரிசளிக்கப்பட்ட இந்த மரம் தேசிய ஜப்பானிய பொன்சாய் அருங்காட்சியகத்தில் கடந்த 1625 ஆம் வருடம் முதல் பாதுகாக்கப் பட்டு வைக்கப்பட்டிருந்தது.    இந்த மரம் இந்த அருங்காட்சியகத்துக்கு எடுத்து வந்த போது பயிரிட்டு சுமார் 3 முதல் 5 வருடங்கள் ஆகியிருக்கலாம் என நம்பப்படுகிறது.   இந்த மரம் ஜப்பானில் நடந்த ஹிரோஷிமா அணுத் தாக்குதலின் போது பாதிக்கப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த மரம் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க தேசிய அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.   இதன் தற்போதைய ஆயுள் சுமார் 392 வருடங்கள் எனக் கூறப்பட்டுள்ளது.    இந்த மரத்தை அமெரிக்காவுக்கு பரிசளித்ஹ்ட யமகியின் மகனும் பேரனும் கடந்த 2001 ஆம் வருடம் வந்து இந்த மரத்தை பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.   அப்போது அவர்கள் “இந்த மரம் எங்களின் உறவினர் ஆகும்.  உறவினரைக் காண நாங்கள் இங்கு வந்துள்ளோம்” எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.