வாடிகன் நகரம்

முன்னாள் போப் ஆண்டவர் பெனடிக்ட் தனது வழ்வின் கடைசிக் கட்டத்தில் உள்ளதாக இத்தாலி நாட்டின் செய்தித்தாளுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

உலகக் கிறித்துவர்களின் தலைவர் போப் ஆண்டவராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஏழு வருடங்கள் பெனடிக்ட் அந்தப் பதவியில் இருந்தார்.    ஜெர்மனையை சேர்ந்த அவர் மீது தவறான நிர்வாகம் மற்றும் நிதி மோசடி ஆகிய குற்றங்கள் எழுந்தது.   அதை ஒட்டி அவர் கடந்த 2013ஆம் வருடம் பிப்ரவரி மாதம் போப்  ஆண்டவர் பதவியை ராஜினாமா செய்தார்.   கடந்த ஆறு நூற்றாண்டுகளுக்குப் பின் இவ்வாறு ஒரு போப் ஆண்டவர் ராஜினாமா செய்தது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

பதவி விலகிய பின் அவர் வாடிகனில் உள்ள ஒரு தேவாலயத்தில் வசித்து வந்தார்.    எப்போதாவது அவர் புகழ்பெற்ற தேவாலயங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் அபூர்வமாக கலந்துக் கொண்டுள்ளார்.    ஆனால் நண்பர்களை அடிக்கடி சந்தித்து வந்தார்.   தற்போது 90 வயதாகும் அவருக்கு நினைவு சக்தி நன்றாக இருப்பதாகவும் நடக்க சிரமமாக உள்ளதால் வாக்கர் உபயோகிப்பதாகவும் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அவர் “கொரியர் டெல்லா சேரா”  என்னும் இத்தாலி செய்தித்தாளில்  ஒரு கடிதம் வெளியிட்டுள்ளார்.  அந்தக் கடிதத்தில் ”நான் ராஜினாமா செய்து ஐந்து வருடம் நிறைந்தமைக்கு எனக்கு வாழ்த்து தெரிவித்துவரும் வாசகர்களுக்கு நன்றி.   எனது தற்போதைய வாழ்க்கை எப்படி உள்ளது என பல வாசகர்கள் கேட்டுள்ளனர்.  நான் தற்போது எனது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் உள்ளேன்.  எனது உடல் அவயங்கள் சிறிது சிறிதாக ஓய்வெடுக்க ஆரம்பித்துள்ளன.  நான் எனது வீட்டுக்கு புனிதப் பயணத்தை மேற்கொண்டுள்ளேன்”  எனக் கூறி  உள்ளார்.

அவருடைய இந்தக் கடிதம் இத்தாலி நாட்டு மக்களிடையே பெரும் கவலையை உண்டாக்கி உள்ளது.