ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தில் மேலும் 5 மாநிலங்கள்….

Must read

புதுடெல்லி:

ரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தில், பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக உணவு துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துளார்.

ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட 12 மாநிலங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. வரும் ஜூன் மாதம் ஒன்றாம் தேதிக்குள் நாடு முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அதன் முன்னோட்டமாக தமிழகத்தில் உள்ள எந்த நியாயவிலைக் கடையிலும் ரேஷன் பொருட்கள் வாங்கிக் கொள்ளும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாரணையை தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டுள்ளது.

அதன்படி முதற்கட்டமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் சோதனை முறையில் இந்த திட்டம் அமலுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்து இருந்தது.

அதன்படி ஸ்மார்ட் ரேஷன் கார்டு வைத்துள்ள யாரும் தமிழகத்தில் எந்த நியாயவிலைக் கடையிலும் அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். ஸ்மார்ட் கார்டு அல்லது ஆதார் கார்டு அல்லது பதிவு செய்த செல்போன் எண் ஆகியவற்றுள் ஒன்றைப் பயன்படுத்தி ரேஷன் பொருட்களை பெறலாம். வேலைக்காக வெளியூர் சென்று பணிபுரிபவர்கள் உள்ளிட்டோருக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழகத்தில் தற்போது 2 கோடியே 5 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ள நிலையில், 35 ஆயிரத்து 233 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

More articles

Latest article