டெல்லி:

த்தியஅரசு கொண்டுவந்துள்ள ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் ஜனவரி 15ந்தேதி முதல்கட்டமாக 12 மாநிலங்களில் அமலுக்கு வருகிறது. இதில்,  தமிழகம் தவிர தென்மாவட்டங்களான கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரள மாநிலங்கள் இணைந்துள்ளன.

பொதுமக்கள் தங்களுக்கு தேவையான ரேஷன் பொருட்களை இந்தியாவில் எந்தவொரு மாநிலத்திலும், எந்த மாநிலத்தவரும் பெற்றுக்கொள்ளும் வகையில், ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’  திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இதற்காக, ஒவ்வொருவரின் ஆதார் அட்டையில் உள்ள பயோமெட்ரிக் அடையாளங்களை நியாயவிலை கடைகளில் உள்ள பி.ஓ.எஸ் கருவிகளுடன் இணைத்த பின்னர் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தபடும் என கூறப்படுகிறது.

இந்த திட்டத்தில்  ஆந்திரா, தெலங்கானா, குஜராத், ஹரியானா, ராஜஸ்தான், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்கள் இணைந்துள்ளன. இந்த மாநிலங்களில், வரும் ஜனவரி 15ம் தேதி ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’  திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.