புதுடெல்லி:
டெல்லியில், இந்த மாத இறுதிக்குள் ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இதற்காக டெல்லியில் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகளில் எலக்ட்ரானிக் பாயின்ட் ஆஃப் சேல் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு அவை வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டன. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தவுடன், டெல்லிக்கு வேலை தேடி வந்துள்ள  பிறமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது ரேஷன் அட்டையை பயன்படுத்தி உணவு தானியங்களை பெற்றுக் கொள்ளலாம்.

ஜூலை 31 க்குள் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்துமாறு அனைத்து மாநிலங்களுக்கும், ஒன்றிய ஆட்சிப் பிரதேசங்களுக்கும் கடந்த 29 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.