வாஷிங்டன்

மது சூரிய மண்டலத்தைப் போல் எட்டு கிரகங்களைக் கொண்ட ஒரு புதிய சூரியமண்டலத்தை நாசா கண்டு பிடித்துள்ளது.

நாசா என்னும் விண்வெளி ஆராய்ச்சி மையம் சமீபத்தில் கெப்லர் என்னும் விண்வெளி தொலைநோக்கியின் மூலம் கண்டுபிடிப்புகளை மேற்கொண்டது.   கடந்த 2009ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த கெப்லர் தொலை நோக்கி மூலம் ஏற்கனவே சுமார் 2500 உலகங்கள் மிகத் தொலைவில் உள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

தற்போது மற்றொரு சூரிய மண்டலத்தை நாசா கண்டுபிடித்டுள்ளது.  கெப்லர் 90 என பெயரிடப்பட்டுள்ள இந்த நட்சத்திர அமைப்பு கிட்டத்தட்ட நமது சூரிய மண்டலத்தின் ஒரு சிறிய பதிப்பாகும்.   இதில் பூமியைப் போல ஒரு கிரகம் கண்டறியப்பட்டுள்ளது.

பூமியைப் போன்றே பாறைகளைக் கொண்ட இந்த கிரகம் அதன் நட்சத்திரத்தை 14.4 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது.    அதாவது பூமி சூரியனைச்  சுற்றி வர ஒரு வருடம் எடுக்கும் போது இந்தக் கிரகம் வெறும் இரு வாரங்கள் மட்டுமே எடுத்துக் கொள்கிறது.   இந்த கிரகத்தின் சராசரி வெட்ப நிலை 426 டிகிரி செல்சியஸ் என விஞ்ஞானிகள் கணக்கிட்டுளனர்.     இந்த கிரகம் பூமியிலிருந்து 2545 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது