திரினாமூல் காங்கிரசில் மேலும் ஒரு எம்.எல்.ஏ. போர்க்கொடி..

மே.வங்க மாநிலத்தில்  இன்னும் மூன்று மாதங்களில் சட்டப்பேரவை  தேர்தல் நடைபெற உள்ளது.

அந்த மாநில முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜியின் திரினாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து தொடர்ச்சியாக  எம்.எல்.ஏ.க்கள், விலகி, பா.ஜ.க.வில் சேர்ந்து வருகிறார்கள்.

‘’உள்ளூர் மட்டத்தில் உள்ள தலைவர்கள் மதிப்பதில்லை’’ என பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள்.குற்றம் சாட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் ஹுக்லி மாவட்டம்  உத்தர்பரா தொகுதி திரினாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரபீர் கோஷல் நேற்று , கட்சியின் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்தும், ஹுக்லி மாவட்டக் குழு உறுப்பினர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்துள்ளார்.

இதனை கொல்கத்தாவில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆனால் கட்சியில் இருந்தோ, எம்.எல்.ஏ.பதவியில் இருந்தோ அவர் விலக வில்லை.

தனது இந்த முடிவுக்கு,இவரும் உள்ளூர் மாவட்ட திரினாமூல் காங்கிரசாரைக் குற்றம் சாட்டுகிறார்.

‘’எனது தொகுதியில் எந்த வேலையைச் செய்யவும் எனது கட்சியினர்  என்னை அனுமதிப்பதில்லை.  நடைபெறப்போகும் சட்டப்பேரவை தேர்தலில் என்னைத் தோற்கடிக்கச் சொந்த கட்சியினரே மிகப்பெரிய அளவில் சதி வேலை செய்கிறார்கள்’’ என எம்.எல்.ஏ கோஷல் .குறிப்பிட்டார்.

-பா.பாரதி.