சண்டிகர்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிரவ் மோடிக்கு அடுத்தபடியாக ரூ.3800 கோடி அளவில் மற்றொரு மோசடி குறித்து தகவல் வந்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு நிரவ் மோடி தனது குடும்பத்தினர் மற்றும் பங்குதாரர் மெகுல் சோக்சியுடன் நாட்டை விட்டு ஓடி விட்டார். தற்போது நிரவ் மோடி லண்டன் சிறையில் அடைக்க்பட்டார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வர அரசு முயற்சி செய்கிறது. ஆண்டிகுவா தீவில் தஞ்சம் புகுந்துள்ள மெகுல் சோக்சியை இந்தியா கொண்டு வரும் முயற்சியிலும் அரசு ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் ரிசர்வ் வங்கியிடம் பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றொரு மோசடி புகார் அளித்துள்ளதாக தெரிய வந்துள்ள்து. சனிக்கிழமை அளிக்கப்பட்டுள்ள அந்த புகாரில் திவால் நோட்டிஸ் அலிட்துள்ள பூஷன் பவர் அண்ட் ஸ்டீல் லிமிடட் என்னும் நிறுவந்த்தின் வாராக்கடன் குறித்து கூறப்பட்டுள்ளது.

பூஷன் நிறுவனம் கணக்கு புத்தகங்களில் தவறான தகவல் அளித்து வங்கி நிதியை தவறுதலாக பயனடுத்தி ரூ.1930 கோடியை இரட்டிப்பாக்கி உள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்த பரிவர்த்தனைகள்  பஞ்சாப் நேஷனல் வ்ங்கியின் சண்டிக்ர் கிளையில் அதிக அளவில் நடந்துள்ளன.

ஏற்கனவே நிரவ் மோடி விவகாரத்தில் நற்பெயரை இழந்த பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு இது மற்றுமொரு அடியாகும்.