சென்னை

பீலா ராஜேஷுக்கு அடுத்தபடியாக சுகாதாரத் துறையில் மேலும் ஒரு இடமாற்றம் நிகழ்ந்துள்ளது.

சமீபத்தில் சுகாதாரத்துறைச் செயலரான பீலா ராஜேஷ் இடமாற்றம் செய்யப்பட்டு வணிகவரித்துறைக்கு அனுப்பப்பட்டார்.

அவருக்கு பதிலாக ராதாகிருஷ்ணன் மீண்டும் சுகாதார செயலராகக் கூடுதல் பொறுப்பு ஏற்றார்.

இது குறித்து பரபரப்பு ஏற்பட்டபோது இது வழக்கமான மாறுதல் என அரசு காரணம் கூறியது.

இந்நிலையில் சென்னை மருத்துவக்கல்லூரி டீன் ஜெயந்தி திடீர் என மருத்துவ விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக டாக்டர் நாராயணசாமி டீனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்குப் பின்னிலையில் பனிப்போர் உள்ளதாகக் கூறப்படுகிறது.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை டீன் பொறுப்பையும் ஜெயந்தி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

[youtube-feed feed=1]