சென்னை:

க்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடும்  இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தானது.

பாராளுமன்ற  தேர்தல் கூட்டணிக்கான பணிகளில் தமிழக அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில், இந்திய ஜனநாயக கட்சி, திமுக காங்கிரஸ்  உடனான கூட்டணியில் இணைவதாக அறிவித்தது. கடந்த சனிக்கிழமை ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து,  திமுக தலைமையிலான அணிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, பாஜக கூட்டணியில் அங்கம் வகித்து போட்டியிட்ட , ஐஜேகே, இந்த தடவை  திமுக கூட்டணியில் களமிறங்குகிறது.

கூட்டணி தொடர்பாக, இன்று திமுக அணியினருடன், ஐஜேகே கட்சி நிர்வாகிகள் பேசியதில் உடன்பாடு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து ஐஜேகே கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கி திமுக அறிவித்தது,.இதையடுத்து இரு கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஐஜேகே கட்சி தலைவர் ரவி பச்சமுத்து,  மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட தயார் என மு.க.ஸ்டாலினிடம்  தெரிவித்திருப்பதாகவும், தங்களுக்கு  விருப்பமான தொகுதியாக கள்ளக்குறிச்சி தொகுதியை கேட்டுள்ளோம் என்றும் கூறினார்.