வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும்போது, வாக்களித்படி, அதிபர் ஜோ பைடன் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டுள்ளார். இது அந்நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஜோ பைடன் அமோகமாக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்ததார். அதைத்தொடர்ந்து, டிரம்பின் பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைளை ரத்து செய்ததுடன், விஷா தொடர்பாக பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உலக நாடுகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
இந்த நிலையில், ஜோபைடன் தேர்தல் பரப்புரையின் போது அதிபராக வெற்றி பெற்றால் கொரோனா நிவாரண நிதியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.1 லட்சம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, தற்போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.1 லட்சம் கொரோனா நிதி வழங்குவதற்கான ஆணையில் கையெழுத்திட்டார்.
இதற்கான 1.9 டிரில்லியன் டாலர் கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்கான மசோதா செனட் சபையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த மசோதாவால் 85 சதவீத அமெரிக்க குடும்பங்கள் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இன்று ஜோ பைடன் அதற்கான கோப்பில் கையெழுத்திட்டுள்ளார்.
இந்த திட்டத்தில் வேலையின்மை உதவி, நேரடி கொடுப்பனவுகள், வரிக் கடன் விரிவாக்கம், தடுப்பூசி விநியோக நிதி மற்றும் மாநில மற்றும் உள்ளூர் அரசாங்க நிவாரணம் ஆகியவை அடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.