Skip to content
  • Fri. Sep 4th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

அமெரிக்காவில் மே மாதத்துக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி! ஜோ பைடன்

Mar 12, 2021

வாஷிங்டன்: அமெரிக்காவில் மே மாதத்துக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு விடும் என அதிபர்  ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உலகிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடாக அமெரிக்க திகழ்ந்து வருகிறது.  உலக வல்லரசான அமெரிக்காவே, தொற்றின் பிடியில் சிக்கி சின்னாப்பின்னமானது. இதற்கு டிரம்பின் அலட்சியமான நிர்வாகமும் காரணமாக அமைந்தது. ஆனால், கடந்த ஜனவரியில் புதிய அதிபராக பதவி ஏற்ற ஜோபைடன், கொரோனா தொற்று பரவலை தடுக்க அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன்படி, அனைவரும் முக்கவசம் அணிய வலியுறுத்தியதுடன், மருத்துவ நிபுணர் குழுவை அமைத்து, தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்தார். இதனால், தற்போது அங்கு கொரோனா கட்டுக்குள் உள்ளது.

தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், பைசர் மற்றும் மாடர்னா ஆகிய  2 தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு அங்கு கொரோனா  கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. தற்போது 3-வதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன  தடுப்பூசி போடவும் அனுமதி வழங்கப்பட்டுஉள்ளது.  தனது பதவிக் காலத்தின் முதல் 100 நாட்களில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயித்து அதற்கான பணிகளை செயல்படுத்தி வருகிறார்.‌

அமெரிக்காவில்  திட்டமிட்டதைவிட தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருவதால் வருகிற மே மாதத்துக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியுடைய அனைத்து அமெரிக்கர்களுக்கும் தடுப்பூசி கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும் என ஜனாதிபதி ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

Post navigation

குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் கொரோனா நிவாரண நிதி! எங்கே தெரியுமா?
இன்று கேரளாவில் 1,780 பேர், டில்லியில் 431 பேருக்கு கொரோனா உறுதி

Related Post

News இந்தியா

டெல்லியில் அதிர்ச்சி: 16 வயது மாணவிக்கு ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் பாலியல் வன்கொடுமை

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

News தமிழ் நாடு

2030ம் ஆண்டில் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயரும் ! தமிழ்நாடு அரசு

உலகம்

உலகம்

ஹாரி–மேகன் அமெரிக்காவை விட்டு பிரிட்டனுக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி: டிரம்ப் கருத்து

September 3, 2026 Sundar
இந்தியா உலகம் தமிழ் நாடு

எல் நினோ வலுப்பெறும்: உலகம் முழுவதும் கடும் வெயில், மழை, வெள்ளம் ஏற்படும் அபாயம் – ஐ.நா. எச்சரிக்கை

September 3, 2026 Sundar
உலகம்

எல் நினோ : சிங்கப்பூரில் கடும் வெயில்… 300 குளிரூட்டப்பட்ட மையங்கள் தயார்

August 31, 2026 Sundar
இந்தியா உலகம் தமிழ் நாடு

நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 903 ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோர் மாயம்

August 31, 2026 Sundar
உலகம்

நேபாள வெள்ளம், நிலச்சரிவு: உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாமல் சிங்கப்பூர் குடும்பங்கள் தவிப்பு

August 28, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer