சென்னை: தமிழக தலைநகரின் மக்கள்தொகையில், ஐந்தில் ஒரு பங்கினர் சார்ஸ்-கோவ்-2(SARS-CoV-2) தொற்று அறிகுறியைக் கொண்டுள்ளார்கள் என்று சீரோ சர்வேயில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; சென்னையின் மக்கள் தொகையில், ஐந்தில் ஒருபங்கு நபர்களுக்கு SARS-CoV-2 தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கிட்டத்தட்ட 80% மக்கள், அக்கிருமி தொற்றக்கூடிய ஆபத்தான நிலையில் உள்ளனர்.
இந்த ஆய்வானது, தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டது. அதில் சென்னையும் ஒன்று. சென்னையின் 15 மண்டலங்களைச் சேர்ந்த 51 வார்டுகளில் மொத்தம் 12,405 நபர்களிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
அந்த மொத்த நபர்களில், 2,673 பேருக்கு SARS-CoV-2 தொற்று அறிகுறி இருந்தது கண்டறியப்பட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.