சென்னை,

சென்னையில் மனவளர்ச்சி குன்றிய சிறுவனின் போலீஸ்  ஆசையை போலீஸ் அதிகாரிகள் நிறைவேற்றி வைத்தனர்.

பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொண்டதிற்கிணங்க அந்த  மனவளர்ச்சி குன்றிய சிறுவனுக்கு ஒருநாள் காவல்துறை துணை ஆய்வாளர் பதவி கொடுத்து கவுரவபடுத்தப்பட்டது.

சென்னை ஜாபர்கான்பேட்டை, ராமச்சந்திர தெருவை சேர்ந்த ராஜூவ் தாமஸ் என்பவருடைய மகன் ஸ்டீவின் மேத்யூ. மனவளர்ச்சி குன்றிய மகன் ஸ்டீவின் மேத்யூவுடன் ராஜூவ் தாமஸ் தொழில் நிமித்தமாக கத்தார் நாட்டில் வாழ்ந்து வந்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு கத்தார் சென்றிருந்தபோது, அங்கு இந்திய தூதரகம் நடத்திய மனவளர்ச்சி குன்றிய மாணவர்களின் கலைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. அந்த நிகழ்ச்சியில் ஸ்டீவின் மேத்யூவும் பங்கேற்றார்.

அவர்களுடன் உரையாடிய மோடி, அவர்களது விருப்பம் குறித்து வினவினார். அப்போது, ஸ்டீவின் மேத்யூ பிரதமரிடம், ‘நான் ஒரு நாள் போலீஸ் அதிகாரியாக இருக்க வேண்டும்’என்று கூறினார்.

அதையடுத்து மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக, சென்னையில் உள்ள அசோக் பில்லரில் தற்போது  வசித்து வரும்  ஸ்டீவின் மேத்யூவும் ஆசையை நிறைவேற்றி வைக்க மத்திய அரசு அறிவுறுத்தியது.

அதைத்தொடர்ந்து. சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், அந்த மன வளர்ச்சி குன்றிய சிறுவனின் கனவை நிறைவேற்ற முடிவெடுத்தார்.

அதன் அடுத்தக்கட்டமாக,  நேற்று மாலை 5. 30 மணிக்கு ஸ்டீவின் மேத்யூக்கு துணை ஆய்வாளர் பதவி வழங்கப்பட்டது. சென்னை அசோக்நகர் காவல் நிலையத்தில் அவருக்கு பதவி வழங்கப்பட்டது.

அவருக்கு துணை ஆய்வாளரின் பணிகளை பற்றி அவருக்கு விரிவாக விளக்கப்பட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அந்த சிறுவனின் தந்தை,  இந்த ஒரு நாள் சந்தோஷமே அவரின் வாழ்க்கைக்கு அதிக உத்வேகம் அளிக்கும் என்று அவரது தந்தை தெரிவித்தார்.

மனம் வளர்ச்சி குன்றிய அந்த சிறுவனின் போலீஸ் பணி பார்ப்போருக்கு வியப்பை ஏற்படுத்தியது.