சென்னை,

மிழகம் முழுவதும் நாளை ஒருநாள் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈ ஈடுபடவுள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவரும் தேசிய மருத்துவக் கமிஷன் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டத்தை கையிலெடுத்துள்ளதாக  இந்திய மருத்துவ சங்க தேர்வு தலைவர் சி.என்.ராஜா ஈரோட்டில் பேட்டியளித்துள்ளார்.

மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ள புதிய  மசோதாவை அரசு திரும்பெற வலியுறுத்தி நாளை ஒருநாள் மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

இந்திய மருத்துவ கவுன்சிலுக்குப் பதிலாக, தேசிய மருத்துவ ஆணையம் எனும் பெயரில் புதிய ஆணையத்தை ஏற்படுத்த வகை செய்யும் மசோதா, மக்களவையில் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில், நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளை ஒழுங்குபடுத்தும் அமைப்பாக இந்திய மருத்துவ கவுன்சில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மருத்துவக் கல்வித் துறையில் நிலவும் ஊழல், நெறிமுறையற்ற நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டி, அதில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு, தேசிய மருத்துவ கவுன்சிலுக்குப் பதிலாக, தேசிய மருத்துவ ஆணையத்தை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு மசோதாவை தாக்கல் செய்துள்ளது என்று மத்திய அரசு தெளிவுபடுத்தி உள்ளது.