சென்னை

திமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்குச் சொந்தமான 14 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீண்டும் சோதனை இட்டு வருகின்றனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஏராளமான ஊழல் புகார்கள் எழுந்தன.  கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக தனது பிரச்சாரத்தில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த ஊழல் குற்றச்சாட்டுகளின் மீது தீவிர விசாரணை நடக்கும் என அறிவித்தது.  அதன்படி முன்னாள் அதிமுக அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

அவ்வகையில் இதுவரை எம் ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர், வீரமணி, வேலுமணி உள்ளிட்டோருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை இட்டதில் கணக்கில் வராத சொத்துக்கள், ரொக்கம், நகை உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன.    அந்த வரிசையில் கடந்த 15 ஆம், தேதி முன்னாள் அமைச்சர் தங்கமணிக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடந்தது.

இந்த சோதனை 69 இடங்களில் நடந்து இதில் ரூ.2.16 கோடி பணம், 1.13 கிலோ தங்கம், சொத்து ஆவணங்கள் என பல பொருட்கள் கைப்பற்றப்படன.  இந்நிலையில் இன்று தங்கமணிக்குச் சொந்தமான 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் மீண்டும் சோதனை செய்கின்றனர்.  இந்த சோதனை நாமக்கல் (10 இடங்கள்) ஈரோடு,(3 இடங்கள்), மற்றும் சேலம் (1இடம்) இல் நடைபெறுகின்றன.