சென்னை

ரும் 19 ஆம் தேதி சென்னையில் 1600 முகாம்கள் அமைத்து மீண்டும் தடுப்பூசி வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்தது.

சென்னையில் கடந்த 12 ஆம் தேதி அன்று அனைத்து 200 வார்டுகளிலும் 1600 தடுப்பூசி முகாம்கள் நடந்தன.  இந்த முகாம்களில் ஒரே நாளில் மொத்தம் 1,91,350 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.  இதில் 98,227 பேருக்கு முதல் டோஸ் மற்றும் 93,123 பேருக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டன.   சென்னை மாநகராட்சி மீண்டும் தடுப்பூசி முகாம்கள் அமைக்க உள்ளது.

 வரும் 19 ஆம் தேதி அன்று மீண்டும் சென்னையில் 1600 மெகா தடுப்பூசி முகாம்கள் சென்னையில் நடத்த உள்ளது.    இந்த முகாம்களில் கோவிஷீல்ட் முதல் மற்றும் இரண்டாம் டோஸ்களும் கோவாக்சின் இரண்டாம் டோசும் போடப்பட உள்ளன.  இது குறித்த விவரங்களை மக்கள் https://chennaicorporation.gov.in/gcc/covid-details/mega_vac_det.jsp  என்னும் இணைய தளம் மற்றும் 044 – 2538 4520, 044 – 4612 2300 என்னும் தொலைப்பேசி எண்களில்  அறிந்து கொள்ளலாம்.

தமிழக முதல்வரின் உத்தரவின்படி அனைவருக்கும் தடுப்பூசி போட மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  அதன்படி அடுத்ததாக வரும் 26 ஆம் தேதி 200 வார்டுகளிலும் 400 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளன.  இந்த முகாம்களில் சுமார் 1,35,000 பேர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடத் திட்டமிடப்பட்டுள்ளது.