18/09/2021: உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22.83 கோடியை தாண்டியது….

Must read

ஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22.83 கோடியை தாண்டியது.

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் நகரில் இருந்து பரவத்தொடங்கிய  கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளின் பொருளாதாரத்தை புரட்டிப் போட்டுள்ளது.  ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டாலும் கூட தொற்றின் வீரியம் குறைந்தயாமல் உருமாற்றம் அடைந்து பல அலைகளாக தாக்கி வருகிறது. டெல்டா வகை கொரோனா பரவலால் ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் தொற்று பரவல் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.  இந்த பரவலை கட்டுப்படுத்தே, தற்போதைய நிலையில், தடுப்பூசியால் மட்டுமே  பாதுகாவலனாக உள்ளது. இதனால் மக்களுக்கு  தடுப்பூசி போடும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

உலகம் முழுவதும் இதுவரை228,377,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 4,692,311 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 204,944,697 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 18,740,744 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 18,640,250 (99.5%) பேர் லேசான தொற்று அறிகுறிகளுடனும்,100,494 (0.5%) பேர் கவலைக்கிடமான நிலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன

More articles

Latest article