காஷ்மீரில் மீண்டும் செல்போன், இணையச் சேவை முடக்கம் : தீவிரமான கட்டுப்பாடுகள்

Must read

ஸ்ரீநகர்

காஷ்மீரில் மீண்டும் செல்போன் மற்றும் இணையச் சேவை மீண்டும் முடக்கப்பட்டு கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

கடந்த 1 ஆம் தேதி அன்று இரவு காஷ்மீர் மாநில பிரிவினை வாத தலைவர் சையத் அலிஷா கிலானி மரணம் அடைந்தார்.  சுமார் 91 வயதாகும் அவர் நீண்ட கால உடல்நலக்குறைவால் ஸ்ரீநகரில் உள்ள தனது இல்லத்தில் மரணம் அடைந்தார்.  இதையொட்டி காஷ்மீரில் பெரும்பாலான பகுதிகளில்  தீவிர கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து செல்போன் மற்றும் இணையச் சேவைகள் நிறுத்தப்பட்டன.  சையத் அலிஷா கிலானியின் உடல் அவர் வீட்டு அருகே உள்ள மசூதியில் அடக்கம் செய்யப்பட்டது.   பிறகு முதலில் ஒரு சில இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு செல்போன் மற்றும் இணைய சேவைகள் சிறிது சிறிதாகத் தொடங்கப்பட்டன.

இந்நிலையில் இன்று காலை மீண்டும் செல்போன் மற்றும் இணையச் சேவைகள் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளன.  பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டைத் தீவிரமாக்கி உள்ளனர்.  குறிப்பாக ஸ்ரீநகரில் பல இடங்களில் மக்கள் நடமாட்டத்தைத் தடுக்கும் விதமாகத் தடுப்புக்கள் போடப்பட்டுள்ளன. மேலும் மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

 

More articles

Latest article