டில்லி

டந்த 2007 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியில் செப்டம்பர் 19 ஆம் தேதி ஒரே ஒவரில் யுவராஜ் சிங் ஆறு சிக்சர்களை அடித்துள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பை 20-20 கிரிக்கெட் போட்டியில் செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி அன்று இந்திய அணியும்  இங்கிலாந்து அணியும் மோதின.   டர்பன் நகரில் நடந்த இந்தப் போட்டியில் அணித்தலைவராக டோனி இருந்தார்.  அவர் டாஸில் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.  முதலில் களமிறங்கிய வீரேந்திர சேவாக் மற்றும் கவுதம் கம்பீர் ஜோடி முதல் விக்கட்டு இழக்கும் போது 136 ரன்கள் குவித்திருந்தது.

சேவாக் 68 ரன்களிலும் கம்பீர் 58 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.   அதன்பிறகு அணித் தலைவர் டோனியுடன் யுவராஜ் சிங் களமிறங்கினார்.   யுவராஜ் சிங் இந்தப் போட்டியில் 12 பந்துகளில் 50 ரன்களை எட்டினார்.  உலகக் கோப்பை 20-20 போட்டிகளில்  குறைந்த பந்துகளில் அரை சதம் எடுத்த முதல் வீரர் என்னும் புகழை யுவராஜ் சிங் அடைந்தார்.

அது மட்டுமின்றி இங்கிலாந்து வீரர் ஸ்டூவ்ர்ட் பிராட் வீசிய 19  ஆம் ஓவரில் யுவராஜ் சிங் அடுத்தடுத்து ஆறு சிக்சர்கள் அடித்து அனைவரையும் அசத்தினார்.   இதுவரை இந்த போட்டிகளில் அடுத்தடுத்து ஆறு சிக்சர்களை ஒரே ஓவரில் யாரும் அடித்தது கிடையாது என்பதால் யுவராஜ் சிங் தனிச் சாதனை படைத்துள்ளார்.

கடந்த 2007 ஆம் வருடம் இதே நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் படைத்த சாதனையை இதுவரை யாராலும் முறியடிக்க முடியவில்லை.   இந்த  நாள் கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு நாளாகத் திகழ்கிறது.