எட்டாவா: உத்தரப்பிரதேசத்தில் கொரோனா நோயாளிகள் அரசு மருத்துவமனை வெளியில் சிகிச்சைக்காக காத்திருக்கும் அவல நிலை காணப்படுகிறது.
உத்தரபிரதேசத்தின் எட்டாவா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வாயில்களுக்கு வெளியே 69 கொரோனா வைரஸ் நோயாளிகள் சிகிச்சைக்காக குறைந்தது ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் அனுமதிக்கும் முன்பே அவர்கள் பிரத்யேக வார்டுகளில் சேருவதற்காக வந்திருந்தனர். பின்னர் இந்த 69 நோயாளிகளும் ஆக்ராவிலிருந்து சைபாயில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இது பிராந்தியத்தின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்றாகும்.
116 கி.மீ தூரத்தில் உள்ள அந்த மருத்துவமனைக்கு அவர்கள் பேருந்தில் அனுப்பப்பட்டனர். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அப்போது அந்த நோயாளிகளிடம் போலீசார் உரையாடும் காட்சிகளும் இடம்பெற்று இருக்கின்றன.
அதில் காவல் அதிகாரி சந்திரபால் சிங் பேசி உள்ளார். அவர் கூறியதாவது; இங்கேயே இருங்கள். விரைவில் ஒரு மருத்துவக் குழு இங்கு வந்து உங்களை அழைத்துச் செல்லும் என்று நான் நம்புகிறேன். எந்த தகவலும் இல்லாமல் நீங்கள் திடீரென்று வந்துவிட்டீர்கள் என்று கூறி உள்ளார்.