பாட்னா: வடமாநிலத் தொழிலாளர்கள் தாங்கப்படுவதாக எழுந்த வதந்தி காரணமாக, தமிழக முதல்வர் சார்பில், மக்களவை திமுக  எம்.பி.யும், திமுக மூத்த தலைவருமான டி.ஆர்.பாலு, பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை பாட்னாவில் சந்தித்து பேசினார். அப்போது தமிழக முதல்வர் சார்பில் விளக்கம் அளித்தார்.

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோ மற்றும் தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியதால் வட மாநிலங்களில் சலசலப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக பீகார், ஒடிசா, ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைகளில் பாஜக எம்எல்ஏக்கள் பிரச்சினை எழுப்பினார். இது மேலும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு பணிகளில் இருந்து வரும், வடமாநில தொழிலாளர்கள் கூட்டம், கூட்டமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். இதனால், தமிழ்நாட்டின் தொழில்துறை முடங்கும் அபாயம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், டிஜிபி தரப்புகளில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், பீகாரில் இருந்து, அரசு உண்மை நிலையை கண்டறிவதற்காக ஊரக வளர்ச்சி திட்ட செயலளர் பாலமுருகன் தலைமையில் நுண்ணறிவு ஐ.ஜி. கண்ணன், தொழிலாளர் நலத்துறை கமிஷனர் அலோக்குமார், போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் குமார் ஆகியோர் அடங்கிய 4 பேர் கொண்ட குழுவை தமிழகத்திற்கு அனுப்பியது. இநத் குழுவினர், ஈரோடு, திருப்பூர், கோவை, சென்னை என பல இடங்களில் பணியாற்றி வரும் வடமாநிலத்தவர்களை சந்தித்து பேசினார்.   அப்போது அவர்களிடம் உங்களுக்கு இங்கு பாதுகாப்பு எப்படி உள்ளது? ஏதாவது குறைகள் உள்ளதா? அச்சுறுத்தல் ஏதாவது இருக்கிறதா? யாராவது உங்களுக்கு எந்தவிதத்திலாவது பிரச்சினை கொடுக்கின்றனரா? என்பது குறித்தும் கேட்டனர். அதற்கு தொழிலாளர்கள் தங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் இங்கு நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வருகிறோம் என தெரிவித்தனர்.  பின்னர் அவர்கள் அதிகாரிகளை சந்தித்து பேசிய நிலையில், இன்று சென்னையில் தலைமைச்செயலாளரை சந்தித்து பேசினர்.

இந்த நிலையில், தமிழக முதலமைச்சரின் சார்பில்,  திமுக எம்பி. டி.ஆர்.பாலு, பீகார் சென்று மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாரை சந்தித்து, அவரிடம் கடிதம் கொடுத்ததுடன், அவரிடம்,  புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறித்த வதந்திகளைத் தடுப்பதற்கும் தமிழக அரசு எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கினார்.

பீகார் முதல்வருடன் திமுக எம்.பி .டி.ஆர்பாலு சந்திப்பு – வீடியோ