ஞ்சை

ரும் 16 ஆம் தேதி அன்று டெல்டா பாசனத்துக்காகக் கல்லணையில் இருந்து நீர் திறந்து விடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காகக் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம் ஆகும். அவ்வாறு திறந்து விடப்படும் தண்ணீர் மூன்று, நான்கு நாட்களில் தஞ்சை மாவட்டம் கல்லணையை வந்தடையும்  பிறகு கல்லணையில் முறைப்படி தண்ணீர் திறந்து விடப்படும்.

இந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் பாசனத்திற்காகத் தண்ணீரைத் திறந்து விட்டார். இந்த தண்ணீர் 16ம் தேதி அதிகாலை தஞ்சை மாவட்டம் கல்லணை வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.16 ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் கல்லணையிலிருந்து முறைப்படி காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

தமிழ்நாட்டின் நீர் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மற்றும் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலரும் இந்த விழாவில் பங்கேற்கின்றனர்.