டெல்லி: ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வருவதால், டெல்லியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒமிக்ரான வரைஸ் டெல்டா வகையைவிட பல மடங்கு வேகமாகப் பரவும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.  இந்தியாவில் இதுவரை 269 பேருக்கு ஒமிக்ரான தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. தலைநகர் டெல்லியில், 64 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த மத்தியஅரசு அறிவுறுத்தி உள்ளது.

இதையடுத்து அடுத்து வரும நாட்கள் பண்டிகை காலம் என்பதால், தொற்று பரவல் மேலும் தீவிரமடைய வாய்ப்பு உள்ளதால், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைளை மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன.

இதையடுத்து டெல்லியில், கிறிஸ்துமஸ் கூட்டங்கள், கலாசார நிகழ்ச்சிகள், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மாவட்ட நிர்வாக அலுவலர்கள் மற்றும் டெல்லி காவல்துறையினர் இந்த உத்தரவை தீவிரமாக அமல்படுத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், முகக்கவசம் அணியாதவர்களைஅனுமதிக்கக் கூடாது என வணிகர்கள் சங்கத்திற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.