டில்லி

மிக்ரான் பரவல் தற்போது டெல்டாவை போல் பரவத் தொடங்கி உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

உருமாறிய கொரோனா வைரஸ் முதலில் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டு தற்போது 120க்கும் அதிகமான நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது.  அகில உலக அளவில் இதுவரை 3.30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 59 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இந்தியாவிலும் ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது.

இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் 1279 ஆகி உள்ளது.  இதில் 400க்கும் அதிகமானோர் குணம் அடைந்துள்ளனர்   இந்த பாதிப்பு கடந்த 28 நாட்களில் ஏற்பட்டுள்ளது.  நேற்று ஒரே நாளில் 198 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் அதிகம் பாதிப்பு காணப்படுகிறது.

இந்த மாநிலத்தில் ஒமிக்ரான் காரணமாக ஒருவர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவே இந்தியாவின் முதல் ஒமிக்ரான் மரணம் ஆகும்

இந்நிலையில் மத்திய அரசு டெல்டாவைப் போல் ஒமிக்ரான் வைரஸ் வேகமாகப் பரவத் தொடங்கியது எனவும் இது டெல்டாவுக்கு மாற்றாக உள்ளது எனவும் அறிவித்துள்ளது.   இவ்வாறு டெல்டாவில் பரவல் அளவை ஒமிக்ரான் எட்டியுள்ளதாக மத்திய அரசு சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளது.  மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பி உள்ளது.