டில்லி

மிக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் குடியரசுத் தலைவர் மாளிகை மற்றும் அங்குள்ள அருங்காட்சியகம் நாளை முதல் மூடப்படுகிறது.

கடந்த நவம்பர் மாதம் உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் பாதிப்பு தென் ஆப்ரிக்காவில்  கண்டறியப்பட்டது.  தற்போது ஒமிக்ரான் உலகெங்கும் வேகமாகப் பரவி வருகிறது.   இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் எனப் பல நாடுகளில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது.   இதையொட்டி பல நாடுகளில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுவரை இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று 1270 பேருக்கு ஏற்பட்டுள்ளது.  இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவிலும் அடுத்ததாக டில்லியிலும் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தவிரக் கடந்த 3 முதல் 4 நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  நேற்று 16,764 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இது டில்லியில் அதிக அளவில் உள்ளது.

எனவே டில்லியில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  அவ்வகையில் குடியரசுத் தலைவர் மாளிகையை பார்வையிடச் சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  அத்துடன் நாளை முதல் குடியரசுத்தலைவர் மாளிகையில் உள்ள அருங்காட்சியகமும் அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.