ரியோடிஜெனிரோ:
ரியோ ஒலிம்பிக்கில் மகளிர் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவு  போட்டியில் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார் பிவி சிந்து.
ஏற்கனவே நடைபெற்ற கால் இறுதி போட்டியில்  உலகின் 2வது ரேங்க் வீராங்கனையான  சீனாவின் வாங் யிஹானை கடுமையாக எதிர்த்து போராடி  முதல் செட்டில் 22-20 என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டிலும் வாங் யிஹானின் சவாலை முறியடித்து புள்ளிகளைக் குவிந்த சிந்து 22-20, 21-19 என்ற நேர் செட்களில் போராடி வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். விறுவிறுப்பான  இந்த போட்டி 54 நிமிடம் நடைபெற்றது.
இன்று மாலை நடக்கவுள்ள மகளிர் பேட்மின்டன் ஒற்றையர்  அரை இறுதி போட்டியில் பி.வி.சிந்து, ஜப்பான் வீராங்கனை ஓகுஹரா நஸோமியுடன் மோதுகிறார். இந்திய நேரப்படி இன்று மாலை 5.50க்கு  போட்டி தொடங்குகிறது.
pv-sindhu-wang-yohan-rio-olympics
இந்த போட்டியில் வெற்றி பெற்றால், இறுதி போட்டியில்  ஜப்பான் வீராங்கனையுடன்  மோதி பதக்கத்தை வெல்ல வேண்டும்.
இன்றைய போட்டியில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினால் நிச்சயமாக ஏதாவது ஒரு பதக்கத்தை வெல்வார் என்பது ஊர்ஜிதமாகிறது.
இன்றைய போட்டியில் தோல்வியுற்றால், 3வது பதக்கத்திற்கான (வெண்கலம்) போட்டியில்  மோத வேண்டும்.