ரியோ டி ஜெனிரோ,
ரியோ ஒலிம்பிக், வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரி 3வது சுற்றுக்கு தகுதி பெற்றார். முதல் சுற்றில் ஜார்ஜியாவின் எசபாவை 6-4 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
theepika
ரியோ ஒலிம்பிக் பெண்கள் வில்வித்தை தனிநபர் பிரிவில் பங்கேற்றுள்ள இந்தியாவின் தீபிகா குமாரி ரவுண்ட்-64 சுற்றில் ஜார்ஜியாவின் எசபாவை எதிர் கொண்டார். இதில் 6-4 (27-26, 29-29, 30-27, 29-27, 29-29) என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று  ரவுண்ட்-32 சுற்றுக்கு முன்னேறினார்.
ரவுண்ட்-32 சுற்றில் தீபிகா,  இத்தாலியின் சர்டோரியை எதிர்கொண்டார். இதில் 6-2 (24-27, 29-26, 28-26, 28-27) என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று 3வது சுற்றான காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
இச்சுற்றில் தீபிகா, சீன தைபே வீராங்கனை டன் யா-டிங்கை எதிர்கொள்கிறார்.
கால் இறுதிக்கு முந்தய சுற்றில் இந்திய வீராங்கனைகள் தீபிகா குமாரி மற்றும் பாம்பேலா தேவி ஆகியோர் இருக்கின்றனர். இவர்களுக்கான போட்டி இன்று மாலை நடக்கிறது.