ரியோ டி ஜெனிரோ,
ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான வில்வித்தை ரிகர்வ் பிரிவின் சுற்றில் இந்திய வீரர் அதானு தாஸ், நேபாள வீரர் ஜித் பஹதுர் முக்தானை 6–0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார்.

அடுத்த சுற்றில் அதானு தாஸ், அட்ரியன் ஆன்ட்ரஸ் புயன்டெஸ் பெரேசை (கியூபா) சந்தித்தார். 6–4 என்ற புள்ளி கணக்கில் அட்ரியனை தோற்கடித்து கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தார்.
அடுத்த சுற்றில் தென்கொரிய வீரர் லீ செங் யுனுடன் மோதுகிறார். லீ செங் யுன், இந்த ஆட்டம் நாளை மறுதினம் நடக்கிறது.