பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் கோமாளி. இது அவரது 24-வது படம் . இதில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். மற்றொரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளார்.
இவர்களுடன் யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.
இந்த படம் கடந்த 15ம் தேதி வெளியானது . இந்நிலையில் இந்த படத்திலிருந்து “ஒலியும் ஒளியும்” வீடியோ பாடல் வெளியாகியுள்ளது .90’ஸ் கிட்ஸ்க்காக சிறப்பாக உருவாகி இருக்கும் இப்பாடலை சத்யநாராயணன், அஜய் கிருஷ்ணன் பாடியுள்ளனர். இந்தப் பாடலுக்கு கபிலன் வைரமுத்து பாடல் வரிகள் எழுதியுள்ளார்.