சிகிச்சை அளிக்காமல் விரட்டியடிப்பு..  ட்ரை சைக்கிளில் தவித்த முதியவர் . 

Must read

சிகிச்சை அளிக்காமல் விரட்டியடிப்பு..  ட்ரை சைக்கிளில் தவித்த முதியவர் .

மதுரை அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த முதியவர் பால்ராஜ் கடும் காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளார்.  ஊரடங்கு அமலில் உள்ளதால் போக்குவரத்து ஏதுமில்லை.  மேலும் வாகன வசதி செய்து கொள்வதற்கு போதிய பணம் ஏதும் இல்லாத சூழ்நிலையில் இவரை ஒரு ட்ரை சைக்கிளில் அமர்த்தி பாலரங்காபுரம் பகுதியிலுள்ள  இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.  என்ன காரணத்தினாலோ அங்குள்ள மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்து  அவரை தத்தனேரி இஎஸ்ஐ மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் தத்தனேரி இஎஸ்ஐ மருத்துவமனையிலும் அவருக்குச் சிகிச்சை அளிக்க மறுத்துத்  திருப்பி அனுப்பிவிட்டனர்.   வேறுவழியில்லாமல் அங்கிருந்து ட்ரை சைக்கிள் மூலமாகவே ராஜாஜி அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுள்ளார் அம்முதியவர்.

இதற்கெல்லாம் கொரோனா தொற்று பயம் ஒரு காரணமாக இருக்கலாம் என்றாலும் வயதான ஒரு முதியவரை உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில்  சிகிச்சை தர வேண்டிய மருத்துவர்களே கிட்டதட்ட 11 கிலோமீட்டர்  அலையவிட்ட சம்பவம் மிகவும் வருத்தத்திற்குரியதாகும்.

– லெட்சுமி பிரியா

More articles

Latest article