மயிலாடுதுறை: மயிலாடுதுறையில்  வீடு புகுந்து மூதாட்டியை வீடு புகுந்து தாக்கிய வழக்கில். தந்தை மகனான  திமுக முன்னாள் எம்எல்ஏக்களான தந்தை மகனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான குத்தாலம் கல்யாணம் மற்றும் அவரது மகன் அன்பழகன் ஆகியோர் உள்பட குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனைia மயிலாடுதுறை குற்றவியல் நீதிமன்றம்  விதித்துள்ளது.

சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான குத்தாலம் பி.கல்யாணம் தற்போது கட்சியின் உயர்மட்ட செயல் திட்டக்குழு உறுப்பினராக உள்ளார். இவரது மகன் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான குத்தாலம் க.அன்பழகன் திமுக மாநில கொள்கை பரப்பு துணை செயலாளராகவும் பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 கடந்த 2012 -ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 -ஆம் தேதி கும்பல் ஒன்று தாக்கல் நடத்தியுள்ளது.  மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவேள்விக்குடி கிராமத்தைச் சேர்ந்த தங்கசாமி என்பவரது மனைவி 62 வயதான மீனாட்சியை  வீட்டுக்குள் புகுந்து ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இதனால் கடுமையாக தாக்கப்பட்டு காயமடைந்த,   மீனாட்சி குத்தாலம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்தியது. விசாரணையில், முதியவர் தங்கசாமியின் மகன் அதிமுகவில் இணைய இருந்ததால், இந்த தாக்குதல் நடைபெற்றதாகவும், இதற்கு பின்னணியில் திமுகவினர் இருந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, மூதாட்டி, மீனாட்சியை தாக்கிய வழக்கில் பிச்சைமுத்து மகன்கள் பி.சந்திரசேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குத்தாலம்  பி.கல்யாணம், அவரது மகன்கள் குத்தாலம் க.அன்பழகன், கடலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் க.அறிவழகன் மற்றும் மனோகர், ரவி மற்றும் கோவிந்தராஜ்  உள்ளிட்டோர் மீது குத்தாலம் காவல் நிலையத்தில்  4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கின் பல்வேறு கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து,  மயிலாடுதுறை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கலைவாணி  பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். அதன்படி குற்றவாளிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

தண்டனையை ஒத்தி வைக்கக் கோரி குற்றவாளிகள் தரப்பில் அளிக்கப்பட்ட மனுவின் மீது ஆணை பிறப்பித்த நீதிமன்றம், வழக்கின் மேல்முறையீட்டுக்காக ஒரு மாத காலம் அவகாசம் வழங்கி உள்ளது.

மூதாட்டி தாக்கப்பட்ட வழக்கில் ஆளுங்கட்சியை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான தந்தை மகன் இருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிகழ்வு மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

[youtube-feed feed=1]