மதுரை: பூம்புகார் நிறுவனம் ரூ.3 கோடி பாக்கி வைத்துள்ள விவகாரத்தில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் செயல்பாடு திருப்தி இல்லை என உயர்நீதிமன்றம் மதுரை நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வருமானம் உள்ள கோவில்களில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து மக்களிடம் பணத்தை வசூல் செய்வதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வரும் இந்து அறநிலையத்துறையின் செயல்பாடுகள் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், அதன்மூலம் கிடைக்கும் வருமானங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மெத்தனம் குறித்து அவ்வப்போது நீதிமன்றம் குட்டு வைத்து வருகிறது.
இந்த நிலையில், தற்போது மீண்டும் அறநிலையத்துறையை கடுமையாக விமர்சனம் செய்துள்ள நீதிபதிகள், அறநிலையத்துறை அதிகாரிகள் பணி செய்வதில் மெத்தனம் காட்டுவதாக கடுமையாக கண்டித்து உள்ளது.
இதற்கிடையில், திருத்தொண்டர் சபை ராதாகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கு ஒன்றில், இந்து அறநிலையத்துறையின் நடவடிக்கை குறித்தும் விவாதம் சென்றது. அப்போது, அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் நிறுவனம் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயிலுக்கு ரூ.3 கோடி வாடகை பாக்கி வைத்திருந்த போதும் இதுவரை வசூல் செய்யவில்லை என்றும் வாடகை பாக்கி இருந்தால் ஏழைகளின் கடையை காலி செய்யும் அதிகாரிகள், பெரிய நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
அறநிலைய அதிகாரிகளுக்கு நல்ல சம்பளம் வழங்கினாலும் பணி செய்வதில் மெத்தனமாக உள்ளனதாக நீதிபதி புகழேந்தி காட்டமாக விமர்சித்துள்ளார்.