ஒடிசாவின் ஸ்வபிமான் ஆஞ்சல் கிராமத்திற்கு  மொபைல் நெட்வொர்க் இணைப்பு

Must read

ஒடிசா:
டிசாவின் ஸ்வபிமான் ஆஞ்சல் கிராமத்திற்கு  மொபைல் நெட்வொர்க் இணைப்பு கிடைத்துள்ளது.
ஒடிசா மாநிலத்திலிருந்து தொலைதூரம் அமைந்திருக்கும், மாவோயிஸ்டுகள் மையமான ஸ்வபிமான் அஞ்சல் நேற்று மொபைல் நெட்வொர்க் இணைப்புகளை பெற்றுள்ளது, இதனால் அந்த கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
கட்-ஆஃப் எரியா என்று அழைக்கப்படும் இந்த பகுதி 3 பக்கங்களிலும் தண்ணீராலும் ஒரு பக்கம் காடுகளாலும் சூழப்பட்டுள்ளது.
ஸ்வபிமான் ஆஞ்சலில் மொபைல் நெட்வொர்க் இணைப்பு கிடைக்கவேண்டும் என்பது அப்பகுதி மக்களின் தொடர்ச்சியான கோரிக்கையாக இருந்தது, அது இன்று நிறைவேறியுள்ளது என்று மல்கங்கிரி மாவட்ட ஆட்சியர் மணிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒடிசா மாநிலத்தில் மொபைல் நெட்வொர்க்கின் சோதனை ஓட்டம் பிபாலாபாதர், ஹண்டல்குடா மற்றும் ஜன்டபாய் கிராமங்களில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதலமைச்சர் நவீன் பட்நாயக் குருப்பிரியா பாலத்தை திறந்து வைத்து அப்பகுதியை ஸ்வாபிமான் அஞ்சல் என்று அறிவித்தார், இதுவே அப்பகுதியின் முதல் சாலை இணைப்பாகும்.
ஸ்வபிமான் ஆஞ்சல் கிராம மக்கள் இப்போது செல்பேசி மூலம் அனைவரிடமும் பேசமுடியும், அவர்களுக்கு 4ஜி நெட்வொர்க் இன்று கிடைத்துள்ளது. ஸ்வபிமான் அஞ்சலில் மட்டுமல்லாமல் சுற்றியுள்ள கிராமத்திற்கும் இனி மொபைல் நெட்வொர்க் கிடைக்குமென்று அப்பகுதியின் ஆட்சியாளர் அறிவித்துள்ளார்.

More articles

Latest article