புவனேஸ்வர்

ழல் தடுப்பு பிரிவு சோதனையின் போது ரூ.2 கோடியை ஒரு துணை ஆட்சியர் பக்கத்து வீட்டு மாடியில் வீசி உள்ளார்.

எந்த ஒரு மாவட்டத்தில் எவ்வித குற்றம் நடந்தாலும் அதற்குப் பொறுப்பேற்று விசாரிக்க வேண்டியது ஆட்சியர் கடமை.  அவருக்குத் துணையாகக் கடமை ஆற்ற வேண்டியது துணை ஆட்சியரின் கடமை.   ஆனால் ஒடிசாவில் அதற்கு நேர்மாறாக ஒரு துணை ஆட்சியர் மீதே புகார் வந்துள்ளது.

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்ட துணை ஆட்சியர் பிரசாந்த் குமார் ரவுத் புகார் வந்தது. இந்த புகாரின் அடிப்படையில் ஊழல் தடுப்பு பிரிவினர் ரவுத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

ரவுத் புவனேஸ்வரில் உள்ள தனது வீட்டின் 6 அட்டைப் பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.2 கோடியைப் பக்கத்து வீட்டு மாடியில் வீசிவிட்டார். அதைக் கண்டு பிடித்த ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் பணத்தைக் கைப்பற்றினர்.  ரவுத் மீது எடுக்கப்பட  உள்ள நடவடிக்கை குறித்த விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.