
புவனேஸ்வரம்:
ஒடிசாவில் முதல்வரின் செயலாளர் வீடு பகுந்து தாக்கிய பாஜகவினர் நால்வர் கைது செய்யப்பட்டனர்.
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனி செயலாளராக இருப்பவர் வி.கார்த்திகேய பாண்டியன். நேற்று மாலை பா.ஜ.க. கொடியுடன் சிலர் இவரது வீட்டிற்குள் அத்துமீறி புகுந்து அவரை சரமாரியாக தாக்கினர். மேலும் வீட்டிற்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மற்றும் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். அப்போது முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு எதிராக முழக்கம் எழுப்பினர். பிறகு தப்பியோடிவிட்டனர்.

இது குறித புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பாஜகவைச் சேர்ந்த நால்வரை கைது செய்துள்ளனர். கார்த்திகேயன் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel