டில்லி

த்திய அரசு ரூ. 1269 கோடி நிதி உதவியை ஆந்திர மாநில திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது.

ஆந்திர மாநில அரசு தங்கள் மாநிலத்துக்கு விசேஷ நிதி உதவி அளிக்க வேண்டும் என பல தினங்களாக மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறது.    சமீபத்திய நிதிநிலை அறிக்கையில் அதற்கான நிதி ஒதுக்கீடு இடம் பெறவில்லை.    அதனால் ஆந்திராவை ஆளும் தெலுங்கு தேசம் மிகவும் அதிருப்தியில் ஆழ்ந்தது.     இதையொட்டி தெலுங்கு தேசம் மற்றும் பாஜக இடையில் கூட்டணி முறிய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வந்தன..

இந்நிலையில் ஆந்திர மாநில திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பதாக மத்திய அரசு உறுதி அளித்தது.    அத்துடன் தற்போது மத்திய அரசு ரூ. 1269 கோடி நிதி ஒதுக்கீடு ஆந்திர மாநிலத்துக்கு அளித்துள்ளது.  இதில்  போலாவரம் நீர்ப்பாசன திட்டத்துக்கு ரூ. 417.44  கோடி மத்திய அரசு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.   அது தவிர  மாநிலங்கள் பிரிவினால் ஏற்பட்டுள்ள வருவாய்ப் பற்றாக்குறைக்காக ரூ. 369.16 கோடியும்,  நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்காக ரூ. 253.74 கோடியும்,  ஊட்டசத்து மற்றும் அங்கன் வாடி திட்டங்களுக்கு ரூ. 192.92 கோடியும்,   மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டங்களுக்கு ரூ.31.76 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதையொட்டி இரு கட்சிகளிடையே உள்ள சர்ச்சைகள் ஒரு முடிவுக்கு வரலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.