உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்தது.*

விராட் கோலி சிறப்பாக விளையாடி 101 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இந்த சத்தத்தின் மூலம் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 49 சதம் அடித்து அதிக சதம் அடித்தவர் என்ற பெருமையை சச்சின் டெண்டுல்கருடன் பகிர்ந்துகொள்கிறார்.

கோலியை அடுத்து ஷ்ரேயஸ் 77 ரன்கள் அடித்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி துவக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து வந்தது.

இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத தென் ஆப்பிரிக்க அணி 27.1 ஓவரில் 83 ரன்களுக்கு ஆலவுட் ஆனது.

243 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி தொடர்ந்து புள்ளிபட்டியலில் முதலிடத்தில் உள்ளது.*

இதுவரை 8 போட்டிகளில் விளையாடி உள்ள இந்திய அணி அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிபெற்று 16 புள்ளிகள் பெற்றுள்ளது.

இந்திய அணிக்கு இன்னும் ஒரே ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில் அடுத்த ஞாயிறன்று நெதர்லாந்து அணியுடன் மோத உள்ளது.