சென்னை: மெட்ரோல் உயர்நீதிமன்ற நீதிபதியாக எல் விக்டோரியா கவுரி உள்பட 5 பேர் பதவி ஏற்றனர். அவர்களுக்கு தலைமைநீதிபதி பொறுப்பு ராஜா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ஜனவரி 17 அன்று எல் விக்டோரியா கௌரியை நியமனம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்ததையடுத்து, அவரை குடியரசு தலைவர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்து உத்தரவிட்டார். இதற்கு எதிரான உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், திட்டமிட்டபடி அவரது பதவி ஏற்பு விழா இன்று காலை 10.30 மணிக்கு உயர்நீதிமன்ற வளாகத்தில் தொடங்கியது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய பதவி ஏற்பு விழாவில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பு டி.ராஜா புதிய நீதிபதிகளாக கவுரி உள்பட 5 பேருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவர்கள் 5 பேரும் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள்.
விக்டோரியா கவுரி வழக்கு உச்சநீதிமன்ற இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்