சென்னை:
தமிழக அரசுக்கு எதிரான போராட்டத்தினை தற்காலிகமாக ஒத்தி வைக்க முடிவு செய்துள்ளோம் என சென்னையில் மாஃபா பாண்டியராஜன் கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் மாஃபா பாண்டியராஜன் பேசுகையில்,‘‘தமிழக அரசுக்கு எதிரான போராட்டத்தினை தற்காலிகமாக ஒத்தி வைக்க முடிவு செய்துள்ளோம்.
ஓ. பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம் பற்றி தினகரன் பேசியது கொச்சைப்படுத்துவதுபோல் உள்ளது. நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தபின் தனது கருத்தினை தெரிவிக்க வேண்டும்.
கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் அவரை வரவேற்போம். ஜெயலலிதா மரணம் பற்றி நீதி விசாரணை வேண்டும் என தினகரன் பேசியதை வரவேற்கிறேன்’’ என்றார்.
Patrikai.com official YouTube Channel