
“முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது போடி தொகுதி பக்கம் வந்தால் மக்கள் தகுந்த பாடம் நடத்துவார்கள்”” என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர்ராஜூ பேசியதாவது:
“மக்கள் இந்த அரசை முழு மனதோடு ஆதரிக்கிறார்கள். ஜெயலலிதாவின் ஆசியுடன், சசிகலாவின் வழிகாட்டுதலில் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மக்கள் செல்வாக்கே கிடையாது. அவர், தனது போடி தொகுதிக்கு வந்து வாக்காளர் கூட்டம் நடத்தினால், மக்கள் அவருக்கு தகுந்த பாடம் நடத்துவார்கள்.
சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது திமுக தரம் தாழ்ந்து நடந்துகொண்டது. அ.தி.மு.க. ஆட்சியைக் கலைக்க தி.மு.க. சூழ்ச்சி செய்கிறது. அது நிச்சயம் நடக்காது” என்று செல்லூர் ராஜூ பேசினார்.
[youtube-feed feed=1]