சென்னை: சவுதி அரேபிய அரசு மருத்துவமனையில் பணியாற்றசெவிலியர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, அரசின் அயல்நாட்டுவேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி.ந.மகேஸ்வரன்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

சவுதிஅரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்குகுறைந்தபட் சம் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவத்துடன்பிஎஸ்சி நர்சிங் தேர்ச்சி பெற்ற 35 வயதிற்கு உட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.

இப்பணிக்கானநேர்காணல் டெல்லி, பெங்களூரு மற்றும் கொச்சின் ஆகிய இடங்களில் வரும் 26ம் தேதி முதல் மார்ச் 2ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பணியாளர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு, ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும். இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளி நாட்டு வேலைகளுக்கானபணி காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைத்தளமான www.omcmanpower.comல் கண்டு பயனடையலாம்.

மேலும்ஊதியம் மற்றும் பணி விவரங்கள் பற்றியவிவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களில் (9566239685,6379179200. 044-22505886 044-22502267) அறிந்துகொள்ளலாம். அயல்நாட்டு வேலைவாய்ப்புநிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோஅல்லது ஏஜென்ட்களோ கிடையாது.

விண்ணப்பதாரர்கள்நேரடியாக பதிவு செய்துகொண்டு இந்நிறுவனத்தின் மூலம் பயனடையலாம். பதிவு மற்றும் பணி விவரங்களின் தகுதியைபொறுத்து முன்னுரிமை வழங்கப்படும். இந்த பணிக்கு தேர்வுபெறும் பணியாளர்களிடமிருந்து சேவைக்கட்டணமாக ரூ.35,400 மட்டும் வசூலிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் செவிலியர்பணி – வலைதள விவரங்கள்

செவிலியர்படிப்பு முடித்த செவிலியர்களின் விவரங்களை, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தரவுதளத்தில் (Website) சேகரித்து வைத்து, வெளிநாடு வேலையளிப்போரிடமிருந்து செவிலியர் பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்படும்போது, அப்பணியிடங்களுக்கு தகுதியான செவிலியர்களை இந்நிறுவன தரவுதளத்திலிருத்து தேர்வு செய்து வெளிநாட்டில் பணிபுரியும் பொருட்டு வேலையளிப்போருக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே, வெளிநாடுகளில் பணிபுரிய விருப்பமுள்ள செவிலியர்கள் இந்நிறுவன வலைதளத்தில் உள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Link வாயிலாக பதிவுசெய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வெளிநாடுசெல்ல விரும்புவோர்களுக்கான Registration Link https://www.omcmanpower.com/regformnew/registration.php?type=candidateform

IELTS/OET தேர்வுகளில்தேர்ச்சிபெற்ற செவிலியர்கள் மற்றும் OET பயிற்சி தேவைப்படும் செவிலியர்களுக்கான Registration Link https://www.omcmanpower.com/regformnew/registration.php?type=ieltsform

இந்நிறுவனத்தில்ஏற்கனவே பதிவு செய்த பதிவுதாரர்கள் தங்களின் IELTS/OET தேர்ச்சியினை புதுப்பிப்பதற்கான (Updation) Registration Link https://www.omcmanpower.com/regformnew/login.php?jobID=OET

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.